வணக்கம். வேண்டாம் போர். சோழ அரசர்கள் இருவர் போட்டி பொறாமையால் தங்களுக்குள் போர் செய்கின்றனர். அதனை தடுக்க கோவூர் கிழார் வருகிறார் அவர் எப்படி அவர்களை சமாதானம் செய்கிறார் என்பதுதான் இந்த கதை. புறநானூற்று பாடல் 45 இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே
நின்னொடு பொருவோன் கண்ணியும்.ஆர்மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்றுநும்செய்தி கொடித்தேர்
நூம்மோரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி
உவகை செய்யும் இவ்விகலே