நமது எண்ணங்கள் தான் நம்மை வழிநடத்துகின்றன என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள் நம் எண்ணங்களை நாம் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் வாழ்வில் சிறந்த உயரிய நிலைக்கு நம்மால் எளிதாக செல்ல முடியும் என்பதை நம்மோடு வாழ்ந்த ஞானிகளும் அறிஞர்களும் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள் அப்படிப்பட்ட எண்ணங்களால் எவ்வளவு நன்மை தீமைகள் நிகழ்கின்றன என்பதை எடுத்துக் கூறும் கதைதான் இது