இன்றைக்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சேர்ப்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள் எப்படி என்றால் மாணவர்களின் பெற்றோர்கள் படித்திருக்க வேண்டும் அவர்களுக்கு தேர்வு வைத்து அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் பிறகு மாணவன் நல்ல ஒழுக்க சீலனாக இருக்க வேண்டும் இப்படி எல்லாம் தேர்வு வைத்து பொறுக்கி எடுத்து நல்ல மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு அதன் பிறகு எங்களால் தான் இவர்கள் இந்த மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே மாவட்டத்திலேயே முதல் மாணவனாக மாணவியாக வந்தார்கள் என்று தங்கள் பெயரை தம்பட்டம் அடித்துக் கொள்வது இது போன்ற பள்ளிகளும் நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டுமே பயிற்று வைப்பேன் என்று பிடிவாதமாய் இருக்கும் ஆசிரியர்களும் இந்த கதையை கட்டாயம் கேட்கவும்