எழுத்தாளர் பிரபஞ்சனின் எழுத்துக்கள் மானுடத்தின் பல பரிணாமங்களை நமக்கு அறிமுகம் செய்வதாய் இருக்கும் அவருடைய கதைகளை முதல் முறை கேட்கும் போது கூட அந்தக் கதையை ஏற்கனவே நாம் கேட்டது போல அல்லது நமது வாழ்வில் அனுபவித்தது போலவும் இருக்கும் அதற்கு காரணம் அவரின் கதாபாத்திரம் படைப்புகள் தான் நாம் அன்றாடம் நம்மைச் சுற்றிப் பார்க்கும் சாமானிய மனிதர்களை சுற்றியே அவரின் கதை கரு உலாவரும் மேலும் மனிதர்களின் சுபாவங்களும் அது எந்த நேரத்தில் எப்படி எப்படியெல்லாம் மாறுகிறது என்பதற்கும் அவர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதில் வல்லவர் என்பதால் அவருடைய கதைகளை படிக்கும் போது நமக்கு ஏற்படும் அனுபவம் நமது மனதிற்கும் நமது வாழ்வியல் முறைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து