Listen

Description

ஒரு பண்டிதர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரையில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு செல்வதற்காக வருகிறார் அங்கே இருக்கும் படகோட்டி இடம் விவரத்தை சொன்னதும் ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை அழைத்துக் கொண்டு விடுகிறேன் என்று அந்த படகோட்டி சொல்கிறார் அந்த புரோகிதர் படகில் ஏற முற்படும்போது அவரால் சரிவர படகை பிடித்துக் கொண்டு வர இயலவில்லை லேசாக தடுமாறுகிறார் உடனே அந்த படகோட்டி அந்த புரோகிதருக்கு உதவும் வகையில் தனது கைகளை நீட்டி என் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள் நான் உங்களை மேலே ஏற்றி விடுகிறேன் என்று சொல்கிறார் 

அவசர அவசரமாக தனது கைகளை எடுத்துக் கொண்டவர் அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன் நான் மிகவும் ஆச்சாரமான என்று சொல்லி தானே ஒருவராக சமாளித்துக் கொண்டு படகில் ஏறி அமர்ந்து கொள்கிறார் 

நதியில் போய்க்கொண்டிருக்கிறது அப்பொழுது தனது அறிவுத் திறனை அந்த படகோட்டி இடம் தெரியப்படுத்தும் வகையில் அவனைப்பார்த்து... படகை செலுத்தி கொண்டிருப்பவனே உனக்கு பகவத் கீதை தெரியுமா என்று கேட்கிறார் 

அதற்கு அந்த படகோட்டி பரிதாபமாக அவரைப் பார்த்து கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்ல உடனே புரோகிதர் ஏளனமாக சிரித்துக்கொண்டே அடே மடையா பகவத்கீதையை கற்று வைத்துக்கொள்ளாமல் உன் வாழ்க்கையில் 25 சதவிகிதத்தை வீணடித்து விட்டார் என்கிறார் 

படகோட்டி அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் படகை செலுத்தி கொண்டிருக்கிறான் புரோகிதர் விடாமல், பகவத்கீதை தான் தெரியாது உனக்கு ராமாயணம் ஆவது தெரியுமா என்று கேட்கிறார்,,, ராமாயணம் எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது சுவாமி என்று அந்த படகோட்டி மிகவும் அடக்கமாக பதில் கூறுகிறார்... உடனே கலகலவென்று சிரித்த புரோகிதர் அடேய் மடையா ராமாயணத்தை படிக்காமல் உனது வாழ்வில் 50 சதவிகிதத்தை வீணடித்து விட்டாயே என்று நக்கலாக சிரிக்கிறார் ஆனால் இதற்கும் படகோட்டி அமைதியாக படகைச் செலுத்திக் கொண்டே இருக்கிறார். 

மகாபாரதம் ஆவது உனக்கு தெரியுமா என்று கேட்க மகாபாரதம் தெரியாது சுவாமி நீங்கள் சொல்லும் எதுவுமே எனக்கு தெரியாது என்று மிகவும் பரிதாபமாக கூறுகிறார் படகோட்டி 

என்ன மகாபாரதமும் தெரியாதா நீ உனது வாழ்வில் 75 சதவிகிதத்தை வீணடித்து விட்டாய் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே படகு நடுக்கடலில் லேசாக தடுமாறுகிறது அதை கவனித்த படகோட்டி அவசர அவசரமாக புரோகிதர் இடம் கேட்கிறான்... ஐயா உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று 

உடனே புரோகிதர் எனக்கு நீச்சல் தெரியாது ஏன் கேட்கிறாய் என்று கேட்க... ஐயோ சாமி நீங்கள் நீச்சல் தெரியாததால் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே இப்பொழுது வீணடிக்க போகிறீர்கள் என்று கூறுகிறார்...  ஏனென்றால் படகில் ஒரு மிகப்பெரிய ஓட்டை விழுந்து விட்டது இப்பொழுது தான் அதை நான் கவனிக்கிறேன் அதன் வழி நீருக்குள் தண்ணீர் ஏறிக் கொண்டிருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் படகு ஏரியில் மூழ்கி விடும் எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் நான் நீச்சலடித்து கரையேறி விடுவேன் நீங்கள் நீச்சல் தெரியாது என்று சொல்கிறீர்கள் நீங்கள் கற்றுக்கொண்ட ஏதாவது உங்களை கரை எட்டுமா என்று மிகவும் பரிதாபமாக கேட்க,,, எனது படகு மூழ்கி கொண்டிருக்கிறதா ஐயோ எனக்கு நீச்சல் தெரியாதே என்னை எப்படியாவது கரை சேர்த்து விடு என்று இந்த புரோகிதர் கெஞ்சுகிறார் 

ஒன்றும் கவலைப்படாதீர்கள் சுவாமி எனக்கு நன்றாக நீச்சல் தெரியும் இந்த மிகப் பெரிய போர்வையை உங்களோடு சேர்த்து என் முதுகில் கட்டிக் கொள்கிறேன் உங்களை காப்பாற்றி விடுவேன் கவலைப்படாதீர்கள் என்று சொல்லி அவரை தன் முதுகோடு கட்டிக்கொண்டு கடலில் குதித்து நீந்தி துவங்குகிறான் படகோட்டி 

அப்போதுதான் படகில் ஏறிய தருணத்தை நினைத்து பார்க்கிறார் அந்த படகோட்டியின் கை மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காக தானே சமாளித்து படகில் ஏறினோம் ஆனால் இப்போது படகு ஏரியில் முழுகும் போது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது மொத்த உடலையும் அந்த படகோட்டி என் உடலோடு கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறோமே என்று நினைத்து தனக்குள் வெட்கப்படுகிறார் 

அதன் மூலம் அன்று அவர் கற்றுக்கொண்ட புதிய கீதை என்னவென்றால் நாம் எதை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் அறிவாளியாக இருக்கலாம் ஆனால் அதற்காக மற்றவர்களை ஏளனமாக நினைக்கக்கூடாது அவரவர் வகையில் அவரவர் கற்றுக்கொண்ட வித்தை அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்ற ஒரு தத்துவத்தை அவர் புரிந்து கொண்டதால் அன்றுமுதல் தனமாக வாழ கற்றுக் கொண்டார் அந்த புரோகிதர் நன்றி