திருவண் புருஷோத்தமம் என்பது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இது புருஷோத்தம பெருமாள் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. இது சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூரில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் புருஷோத்தமன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பாள் புருஷோத்தம நாயகி, தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்