கற்றவர்க்கே சென்றவிடமெலாம் சிறப்பு! DISCONTINUED .ஒரு மனிதன் தன் வாழ்வில் அவசியம் கொண்டிருக்க வேண்டியது கல்வி. கல்வியினைச் சிறப்பித்து பல அறிஞர்கள் பாடியுள்ளனர். மேலும், நம்முடைய இந்து மதத்தில் கல்விக் கடவுள் வாணியை மும்மூர்த்திகளில் முதலாமவராக நம் ஞானிகள் குறிப்பிடுகின்றனர். “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது ஔவை வாக்கு. ஆக, நாம் பொருள் படைத்திருக்காவிடிலும் கல்விச் செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்று புலப்படுகிறது.