Listen

Description

அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "பிரான்சிஸ் வைட் எல்லிஸ்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Francis Wyte Ellis. 1777இல் இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis), எப்பொருளையும் ஆய்ந்து மெய்ப்பொருள் காண்பதில் ஆர்வமுள்ளவர். ஆங்கில நாட்டு அரசியலாளர்கள் அவரைச் சென்னை நிலவரி மன்றத்தின் செயலாளராக (secretory of revenue board) முதலில் நியமித்தனர். எட்டு ஆண்டுகள் அப்பணியில் இருந்தார் எல்லிஸ். அப்போது நிலவுரிமை குறித்த விவரங்களையெல்லாம் தெளிவுறக் கற்ற அவர், நிலவுடைமையாளருக்குரிய உரிமைகள், கடமைகள் முதலியவற்றைச் சென்னை அரசியலாளர்களுக்குத் தெளிவுற உணர்த்தினார். ‘மிராசு முறை’ குறித்து அவரெழுதிய நூல் இன்றும் ஆதார நூலாகக் கொள்ளப்படுகின்றது. தமிழ்பால் கொண்ட ஈடுபாட்டால் எல்லிஸ் என்ற தம் பெயரை ’எல்லீசர்’ என்று மாற்றிக்கொண்டிருக்கிறார். 1856இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) என்ற ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே 1816இல், திராவிட மொழிகளின் தொன்மையை, வடமொழிச் சார்பில்லா அவற்றின் தனித்தன்மையை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் எல்லீசரே என்பது தமிழ்கூறு நல்லுலகம் அறிய வேண்டிய அரிய செய்தியாகும்.