பசுமை சமுதாய வானொலி.
நம் நாட்டில் பெண்களில் சராசரியாக விபத்து மற்றும் தீக்காயம் போன்ற குடும்ப வன்முறையால் 96000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு மனரீதியான ஆலோசனைகள், உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு சிசிச்சை வழங்குதல் உட்பட பெண் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண
PCVC-International Foundation for Crime Prevention and Victim Care
அமைப்பு உதவுகிறது.
உதவிக்கு: PCVC அமைப்பு, Crime Prevention and Victim Care (PCVC)
வழிகாட்டல் எண்: 1800 1027 282
@pcvc2000
@PCVC | Women Safety Vs Domestic Violence
1)PCVC இந்த அமைப்ப பத்தியும், அதோட செயல்பாடுகள் மற்றும் சேவைகள்?
2) குடும்ப வன்முறை அப்டினா என்ன? ஒரு குடும்பத்துல பெண்களுக்கு எந்த மாதிரியான வன்முறைகள் இழைக்கப்படுது?
3) இந்த கொரோனா பெருந்தொற்று காலத்துல தங்களுக்கு வன்முறை இழைக்கப்படுதுனு எவ்வளவு பெண்கள் உங்கள நாடி வந்தாங்க? எந்த மாதிரியான பிரச்சனைகளை அவுங்க சந்திச்சுருந்தாங்க?
4) பெண்களுக்கு எதிரான வன்முறைல குடும்பத்தோட பங்கு என்ன?
5) நமக்கு தெரிஞ்ச ஒருதவுங்க குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும்போது நாம் எப்படி அவுங்களுக்கு உதவலாம்?
6) குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுகிட்டு இருக்குற பெண், ஒரு கடுமையான முடிவு எடுக்குற்றத்துக்கு முன்னாடி அவுங்க என்ன செய்யணும்?
7) பெண்கள் தங்களுக்கு வன்முறைகள் இழைக்கப்படுதுனு எப்படி அறிய முடியும்?
8) திருமணம் செய்து கொடுத்த தன் மகள், தன் வீட்டில் வந்து ஓரிரு வாரம் தங்க ஆசைப்படும் அம்மா, தனது மருமகள் அவளது அம்மா வீடிற்கு பொய் தங்க அனுமதிப்பதில்லை? இந்த மாதிரி பிரச்சனைகள் எங்கள் பகுதியில் அதிகம், இந்த மாதிரியான சூழ்நிலையில மாமியார்ன்ற பெண்ணும் முருமகள்ன்ற பெண்ணும் இத எப்படி கையாளனும்?
9) மனரீதியான வன்முறைகள், உடல் ரீதியான வன்முறைகள் பெண்கள் இத எப்படி எதிர்கொள்றது?
10) கல்வி இந்த விசயத்துல பெண்களுக்கு எவ்வளவு முக்கியம்?
11) இந்த நிகழ்ச்சியை கேட்டுட்டு இருக்குற ஒரு பெண், இதை கேட்டதுக்கு அப்பறம் தனக்கு வன்முறை இழைக்கப்பட்டு இருக்குனு உணர்ந்தா அவுங்க என்ன செய்யணும்?
இப்படி பல்வேறு கேள்விகளுக்கு PCVC அமைப்பின் Senior Manager, Ms.Sajitha அவர்கள் பதிலளிக்கிறார். இந்நிகழ்ச்சி 06.03.2021 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒலிபரப்பாகிறது. கேட்டு பயன்பெறுங்கள் பசுமை நேயர்களே!