குமணனைத் தெரியுமா? | Great King Kumanan | Purananuru | Tamil Literature | Jeya Maran
Link for the last 2 videos: https://www.youtube.com/watch?v=p78sz... https://youtu.be/VfrlpxGlrQI மொழி சொல்லும் வழி - 31 புறநானூறு - 165 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில் தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல் ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றெனன் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என் நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத் தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின் ஆடுமலி உவகையோடு வருவல் ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே. --பெருந்தலைச்சாத்தனார்