Listen

Description

SHOW LESSமொழி சொல்லும் வழி - 20  நாரைவிடு தூது  நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.               - சத்திமுத்தப் புலவர்