மொழி சொல்லும் வழி - 28 அகநானூறு - 136 மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு (கறிச்சோறு =காயோடு மிளகு கலந்த சோறு) வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் 5 சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, 10 மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, 15 தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, மழை பட்டன்ன மணல் மலி பந்தர், இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,