Listen

Description

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இது பொன்விழா ஆண்டு. இந்திய நாட்டுக்கென்று ஒரு தேசிய கீதம் இருப்பது போல், தமிழ்நாட்டுக்கென்று தமிழ் மொழிக்கென்று தனித் தன்மையோடு ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று தொலைநோக்கோடு சிந்தித்தவர் தமிழக முதல்வர் அண்ணா. அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த உடனேயே அதைச் செயல்படுத்தியவர் கலைஞர் மு.கருணாநிதி.

இந்த வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பாடலைத் தெரிவு செய்த கலைஞர், இசையமைத்த எம்.எஸ்.வி., பாடிய டி.எம்.எஸ்., பி.சுசீலா ஆகியோரையும் வாழ்த்துவோம்!