வாசிப்பவர் : ராஜா செல்வம் | “உன் நண்பனுக்கு உதவ முடிவு செய்தால் அவன் சுமை உன் தலையில் விழாத வகையில் உதவி செய்” இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் நிதி சார்ந்த கொள்கைகள் அனைத்தும் பாபிலோனில்தான் பிறந்து வளர்ந்தது. ஏனெனில் அங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் பணத்தின் மதிப்பை போற்றினார்கள். பணத்தை சேமிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள். அவர்களைப்போல் பொருளாதார வெற்றியை விரும்பும் அனைவருக்கும் எவ்வாறு பணம் சம்பாதிப்பது, சாம்பாதித்ததை எப்படி சேமிப்பது, சேமித்ததை முதலீடு செய்து, மேலும் எவ்வாறு சம்பாதிப்பது என்பதைக் கற்றுத் தருவதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம்.