வாசிப்பவர்: ராஜா செல்வம்
அடித்துப்பிடிக்கும் கூட்டம், அழுகிற குழந்தைகள், மூக்கைத்துளைக்கும் கிருமி நாசினியின் வாசனை - கதைகள் தொடங்குவதற்கு ஏற்ற இடம் அல்ல. ஆனால் நிஜ வாழ்க்கையில், பெரும்பாலான கதைகள் இங்கே தொடங்குகின்றன/ முடிவடைகின்றன.
‘குழப்பமான மற்றும் கூட்டமான இந்திய மருத்துவமனை’
“நோய்வாய்ப்பட்ட நோயாளி, கோபமடைந்த உறவினர்கள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் பிடிபட்ட இந்திய மருத்துவர் மாயாஜால சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற வேண்டும். அவரது தோளில் கனமான உணர்ச்சிகரமான மணல் மூட்டை அழுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் அவர் தனது வெள்ளை கோட் பாக்கெட்டிலிருந்து மந்திரம் போல ஒரு முயல் அல்லது இரண்டை இழுத்து நோயாளிகளை குணப்படுத்த முயற்சிக்கிறார்.”
இந்தியாவில் மருத்துவம், மருத்துவமனை, நோயாளிகள், நோயாளியின் உறவினர்கள், அவர்களின் மனநிலை, மருத்துவர், அவரின் சூழ்நிலை பற்றி நிறைய படித்திருப்போம். ஆனால் இவை அனைத்தையும் ஒரு மருத்துவரின் பார்வையில், அவர் சந்தித்த பல வித மனிதர்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆசிரியர் பிரபலமான இதய நோய் நிபுணரான டினி நாயர்.