வாசிப்பவர்: ஹேமபிரபா
எழுத்தாளர் மற்றும் கவிஞரான நரன், பிறந்தது விருதுநகரில். பள்ளிக்காலங்களில் கிறித்துவ ஈடுபாடு தீவிரமாய் இருந்திருக்கிறது. தேவாலய நாடகங்கள் போடுவதும், அதில் நடிப்பதும் இவருக்குப் பிடித்திருந்தது. நாடகங்களை இவரே எழுதத் தொடங்கும்போது விவிலியம் சார்ந்து அதிகம் வாசித்திருக்கிறார். இவரின் இன்றைய எழுத்துக்களிலும் இதன் தாக்கம் இருக்கிறது. தேவதச்சனின் கவிதைகளும் அவருடன் ஏற்பட்ட உரையாடலும், இவரின் கவிதைகளை இன்று வரை வழி நடத்துவதாக நினைக்கிறார். ‘சரீரம்’, ‘கேசம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், ‘மிளகு, பருத்தி மற்றும் யானைகள்’, ‘லாகிரி’, ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’, ‘உப்புநீர் முதலை’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.