Listen

Description

நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் கடும் எதிர்ப்புகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று கூறுகிறார். பொதுவாக இது விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்கு சாதகமானது, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப்பாதுகாப்பை அழிப்பது என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.



மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.



இந்த 3 சட்டங்கள் எதை நோக்கியது?



இதனை ஒரு எளிய மற்றும் பக்கச்சார்பற்ற கலந்துரையாடலாக நடத்த விழைகிறது வாசகர் வட்டம். அனைவரும் மூன்று மசோதாக்களையும் ஓரளவிற்கு படித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.



இந்த மசோதாக்களை ஆராய்வதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். அனைவரும் கலந்துகொண்டு கலந்துரையாடலை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் !