Listen

Description

விடா முயற்சியால் வெற்றியை விளைவித்த வித்தகர்

தாதாசாகேப் பால்கே விருதாளர் ரஜினிகாந்த்'

திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்தியக் குடியரசு துணைத் தலைவர் மேதகு.வெங்கைய நாயுடு அவர்கள் இந்த விருதினை வழங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு. அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் மாண்புமிகு எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இவர் விருதுகளுக்காக நடிப்பதில்லை, ஆனால் எந்த விருதும் இவரை விட்டுவைக்கவில்லை. அந்த வரிசையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினி சாருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்தியத் திரை உலகின் மிக உயரிய விருதாக போற்றப்படும், தாதா சாகேப் பால்கே விருதை இதற்கு முன்பு தமிழ்த் திரையுலகம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும், இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்களும் மட்டுமே பெற்றுள்ளனர்.

இந்தியாவின் மிக உயரிய திரைக்கலை விருதினைத் தன் உழைப்பினால் வென்று நமக்கு பெருமை தேடித் தந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.