'மத்திய அரசின் விருதுபெற்ற தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்! ' 36
நல்ல செய்திகள் கேட்டு நாட்கள் பல ஆன நிலையில், தமிழ்த் திரைப்படத் துறையினர் இந்திய அளவில் பல வெற்றி விருதுகளை மத்திய அரசால் வழங்கப் பெறுகிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி படிக்க கேட்க பார்க்க இனிமையாக இருந்தது.
ஆதிகாலம் முதல் மனிதனை ஆற்றுப்படுத்தும் வேலையைத் தானே கலைவடிவங்கள் செய்துவருகின்றன. முத்தமிழின் மூன்று வடிவிலும் இயல் இசை நாடகம் என கலைகளில் மூழ்கி அனுபவிப்பவர்கள் தமிழர்கள்.