இருட்டை இகழ்வதை விட, விளக்கேற்றுவது உத்தமம்! - 37
அறங்காவலர் பணி செய்ய அரிய வாய்ப்பு
இப்போது சென்னை உயர் நீதிமன்றம், அறநிலையத்துறையில் தலையிட்டு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் உங்கள் நியமனங்கள் சரியானதாக இருக்கிறதா என்பதையும் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தன் சிறப்பு கவனத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது.
நாம் எல்லோரும் திருக்கோவில்களில் நடைபெறும் அவலங்களை குறை சொல்வதோடு மட்டுமல்லாது, அவற்றையெல்லாம் உரிமையுடன் சரி செய்யும் அதிகாரத்தையும் பெறக்கூடிய மிகச் சாதகமான சூழ்நிலை தற்போது நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே ஆற்றல்மிக்க நம் மாவட்ட்டத் தலைவர்களே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 10 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள திருக்கோவில்களைக் கண்டறிந்து பட்டியலிடுங்கள்.
அந்த கோவில்களுக்கு அறங்காவலராக பணியாற்ற தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்யுங்கள். அவரை முறைப்படி தமிழக அரசுக்கு விண்ணப்பிக்க வையுங்கள்.
ஒவ்வொரு மாவட்டத் தலைவரும் இதனை முக்கிய பணியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கோவிலுக்கும் தகுதியான ஐந்து நபர்களிடம் இருந்தாவது விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் அப்போதுதான் அதிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கக் கூடிய அதிக பட்ச வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.