1953-ல் பிறந்த தமிழகத்திற்கு, 1967ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழகம் தனியாக வரையறுக்கப்பட்ட நாள் (01.11.1956.) 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அப்படியாக வரையறுக்கப்பட்ட நாளை அனைத்து மாநிலங்களும் நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடும் போது பெயர்மாற்றம் செய்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடு வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வரலாற்றுப் பிழை.