Listen

Description

'தேசியச் செயலர் அருண் சிங் வருகை, கொங்கு மண்டலத்தில் உவகை!!'

25/10/2021

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.

இது என் கடிதம் அல்ல என் கடிதத்தில் இடம்பெறும் நம் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அவர்களின் மிக முக்கியமான பேச்சு. நம் கட்சியின் அனைத்து கிளை மண்டல் தலைவர்களின் கவனத்திற்குச்  செல்ல வேண்டும் என்பதற்காக அதைக் கடிதத்தில் கொடுக்கிறேன்.

இது என் கடிதம் அல்ல என் கடிதத்தில் இடம்பெறும் நம் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அவர்களின் மிக முக்கியமான பேச்சு. நம் கட்சியின் அனைத்து கிளை மண்டல் தலைவர்களின் கவனத்திற்குச்  செல்ல வேண்டும் என்பதற்காக அதைக் கடிதத்தில் கொடுக்கிறேன்.

கடந்த 20ஆம் தேதி மாலை தேசிய பொதுச் செயலாளரும், மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினருமான அருண் சிங் அவர்கள், கோவை வந்திருந்தாங்க. நம்ம பாரதிய ஜனதா கட்சியில்தாங்க  கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை எல்லாம் நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்து பேசி அவங்க உணர்வுகளை புரிந்து கொள்வதற்காக,  பிரவாஸ் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சி, அதில் தேசிய தலைமையிலிருந்து தலைவர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அவர் வந்தவுடன் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி கட்சியின் தலைவர்கள் கூடிய கூட்டமல்ல ஈரோட்டில் நாற்பத்தி ஒன்பதாவது வார்டுல நம் கட்சி ஜெயிச்சது அந்தக் கிளை தலைவரையும் இலை உறுப்பினர்களையும் சந்தித்து பேசுவதற்கான வருடம் முதல் நிகழ்ச்சி. காலையில்  கட்சியின் தொண்டரின் வீட்டிலே காலை உணவை எடுத்துக் கொண்டார்.

அப்புறம் அடுத்தடுத்து தொடர் நிகழ்ச்சிகள் எல்லாமே கட்சியின் கிளை, மண்டல் என்று அடிமட்ட தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார். இனி நம் தேசிய பொதுச் செயலாளர் திரு அருண் சிங் அவர்களின் பேச்சுத் தொகுப்பு