Listen

Description

' பிரதமரின் அரிய திட்டங்களை அறிந்து கொள்வோம்; மக்களை அறியச் செய்வோம். '

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.

நம் பாரதப் பிரதமரின் பொற்கால நல்லாட்சியின்கீழ்ப் பல அருமையான மக்கள் நலத் திட்டங்கள், நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் நினைவில் கொண்டு உருவாக்கப் படுகின்றன.

ஆனால் பல நேரங்களில் மாநில அரசின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பல சிறப்பான திட்டங்கள் செயல் வடிவம் பெறாமலேயே முடங்கிப் போய் விடுகின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களும் அனுபவித்துப் பயன்படுத்தும், நவோதயா பள்ளி - மிகக் குறைந்த செலவில் தங்கிப் படிக்கும் வசதியுடன் கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை.