கொடிய நோய் தொற்றுக்கு கொரோனாவின் உச்சம்...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்...
பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்ட தலைமை மாற்றம்...
அதில் எனக்கு வழங்கப்பட்ட ஒரு அரிய வாய்ப்பு என்று இன்று என் சிந்தனை ஓட்டங்கள் சிறகடித்துப் பறந்தன.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமைத் தொண்டனாக நான் பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து என் எண்ணம், என் சிந்தனை, என் உழைப்பு, என் ஓட்டம், என் முயற்சி, அனைத்துமே எத்தனை விரைவில் முடியுமோ… அத்தனை விரைவில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடவேண்டும், என்ற ஒற்றை இலக்கு தவிர வேறு எதுவும் இல்லை... அன்பான சொந்தங்களே அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.