சுதந்திரத்தின் சுந்தரத் திருவிழா(ஆசாத் கா அம்ரித் மகோத்சவ்) என்ற இந்த பெரும் கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அடுத்து வரவிருக்கும் இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் 2022ம் வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கொண்டாட்டங்கள் 75 வாரங்கள் சுதந்திரத்தின் சுந்தரத் திருவிழாவாக கோலாகலமாக நடைபெற உள்ளன. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் புத்துணர்ச்சியுடன், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதைகள், நினைவேந்தல்கள் நிகழ்த்தப்படுகின்றன.