#NNA_LIVE #VARA2
⚜திருவருட்பா : 4- ஆம் திருமுறை | ⚜ஆளுடைய பிள்ளையார் அருண் மாலை | ⚜பா_ எண் : 2646 - 2647
உயிர் அனுபவம் உற்றிடில் அதனிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்
அச்செயிரில் நல்லனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய்..!
பயிலும் மூவாண்டில் சிவை தருஞானப் பால் மகிழ்ந்துண்டு மெய்ந்நெறியாம்
பயிர் தழைந்து உறவைத்தருளிய ஞான பந்தன் என்றோங்கு சற்குருவே!!
தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே ஒத்ததன்
மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிரனுபவம்!
என்றித் துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறளித்தனை
அன்றோ சித்த நற்காழி ஞான சம்பந்தச் செல்வமே எனது சற்குருவே!!