Listen

Description

இயல் குரல் கொடை - பாரதி புத்தகாலயம் இணைந்து தன்னார்வலர்கள் முயற்சியில் ஒலி புத்தகத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள சிறுகதை. பெயர் இல்லாதவர்கள், வாசித்தவர் தேவிகா.

வாசிப்பு அனுபவம்: ஆயிஷா நடராசனின் கதைகள் 'சத்தமில்லாத ரப்பர் வளையல்கள் போல்' தனித்துவம் வாய்ந்தவை. அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களின் அனுபவங்கள் எண்ணற்றவை.  'பெயர் இல்லாதவர்கள்'  கதையில் வரும் உயிர்ச் சான்றிதழுக்காக அலையும் பெரியவர், 'அரசு முத்திரை யிலுள்ள நான்கு சிங்கங்களைப் போல' அரசின் அதிகார பிம்பமாக மிரட்டும் அதிகாரி .... நிதர்சனமாக நடப்பதை சுவைபடக் கூறியுள்ளார் கதாசிரியர். அவசியம் கேட்டு சிந்தனை செய்ய வேண்டிய கதை!