சாவர்க்கர் தலைமையில் கோட்சே, நாராயண் ஆப்தே உள்ளிட்டோர் அடங்கிய குழு 1948 ஜனவரி 20 அன்று நடந்த ஒத்திகைக்குப் பிறகு காந்தியைச் சுட்டுக்கொல்ல 1948 ஜனவரி 30 என்ற நாள் குறிக்கப்பட்டது.
ஜனவரி 30 என்ற நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது கூடத் தற்செயலானது அல்ல. நன்கு திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் விசேஷமான நாள். ஏனெனில் 1933 ஜனவரி 30 என்ற அந்த நாளில்தான் ஜெர்மனியின் சேன்ஸ்ல ராக ஹிட்லர் என்னும் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசி எறியப்பட்ட மாபாதகன் பதவியேற்றுக் கொண்ட நாள். காந்தி சுட்டு வீழ்த்தப்பட்டு சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட காந்தியின் உருவப் பொம்மையைச் செய்து, அதில் துப்பாக்கியால் சுட்டு சிவப்பு மையைக் கொட்டி ‘மகாத்மா’ கோட்சேவுக்கு வெற்றி முழக்கமிட்டு ஒரு கும்பல் கொக்கரிக்கிறது எனில் அவர்களுக்கு இன்னும் மிக வலிமையாகவும் ஆழமாகவும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இந்த மண்ணில் வேர் விட்டுள்ளது என்பதையே உணர்த்துகிறது. #MahatmaGandhi #AntiNationalRSS