அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப் பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.