பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.