நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை; என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!