கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.