வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்; சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே; பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.