வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.