வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.