கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப் பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே! அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.