உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால் துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.