இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே! உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.