திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.