கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின் பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத் திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!