பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.