ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம் முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!