பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும், ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.