அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும் களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு, வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன்.