உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல் இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப் படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.