பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும், வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.