மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்; பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.