வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப் பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.