Nandhi arulPetra Nadharai Naadinom
Nandhigal Nalvar Siva Yoga MaaMuni
Mandru thozhuda Patañjali Vyakramar
Endrivar Ennodu (Thirumoolar) Enmarumaame
Meaning
We sought the feet of the God who graced Nandikesvara
The Four Nandhis,
Sivayoga Muni, Patañjali, Vyaghrapada and I (Thirumoolar)
We were these eight.
ஓரு சமயம் ஆதிசேஷன் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணவேண்டுமென கயிலை சென்று சிவனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு சிவன் பூலோகத்தில், தில்லை வனத்தில் தான் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காண ஏதுவாக அத்திரி மகசிரியின் மகனாக வளர்ந்து வருமாறு ஆதிசேசனை பணிக்கிறார். அத்திரி மகரிசி ஆற்றில் சந்தியா வந்தனம் செய்யும்போது ஐந்து முகங்களுள்ள ஒரு குழந்தையாக அவர் கைகளில் வந்து விழுகிறார். மகரிசியும் அந்தக் குழந்தையை எடுத்து பதஞ்சலி என்ற பெயரிட்டு வளர்க்கிறார்.
அத்திரி மகசிசியும், புலிகால் முனிவரும் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விருப்பம் கொண்டு தவம் செய்கின்றனர். அப்போது பதஞ்சலியும் அவர்களுடன் சேர்ந்து தவமியற்றினார். இவர்களின் தவத்தற்கு இரங்கிய ஈசன் ஒரு வியாழக் கிழமையுடன் கூடிய தைப்பூச நாளில் இவர்களுக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருள்கிறார்.
இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகாபாஷ்யத்தைக் கூறினார் என்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன.
thiruchitrambalam