Listen

Description

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேல்  UAPA சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, கடைசியில் 84 வயதில் ஒரு விசாரணை கைதியாக மும்பையில் இறந்து போனார் அருட்தந்தை ஸ்டான் சுவாமி. திருச்சி - பூதலூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, ஜார்கண்ட் மாநில ஆதிவாசிகளின் நலன்களுக்காக 50 ஆண்டுகளை செலவிட்ட ஸ்டேன் சாமியின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் சிறுமைப்படுத்தி, அவரை ஒரு பயங்கரவாதியாக சித்தரித்தது இந்த அரசு. அவர் மரணம் அடைந்த, 2021, ஜூலை 5-ம் தேதி Twitter space-ல் நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தின் இணைப்பு இது. இதில் கலந்துகொண்டோர், 01. பாலன், வழக்குரைஞர், பெங்களூரு, 02.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், PRPC, 03.மருதையன், 04.நாதன், 05. அசீப், பத்திரிகையாளர், 06.விக்ரமன், செய்தித் தொடர்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.